'தொங்கா நா கொடுக்கு' படத்தின் முதல் பாடல் அக்டோபர் 28-ல் ரிலீஸ்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'தொங்கா நா கொடுக்கு' படத்தின் முதல் பாடல் அக்டோபர் 28-ல் ரிலீஸ்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மவுலி தனுஜ் நடிப்பில் உருவாகி வரும் முழு நீள நகைச்சுவை கிரைம் திரைப்படமான 'தொங்கா நா கொடுக்கு' (Donga Naa Koduku) படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 28 அன்று வெளியாகவுள்ளதாக பிஆர்ஓ வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 'ஓ மை காட்' (Oh My God) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் இளைஞர்களைக் கவரும் துள்ளலான இசை வடிவத்தில் உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளாலும் வித்தியாசமான கதைக்களத்தாலும் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் முதல் பாடலின் அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. தியேட்டர்களில் ரசிகர்களைச் சிரிக்க வைக்கத் தயாராகி வரும் இந்த என்டர்டெயினர் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் நோக்கத்துடன் வரும் நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்