நவம்பர் 9 அன்று வெளியாகும் 'தொங்க நா கொடுக்கு' பட டிரெய்லர்: நவம்பர் 13ல் திரையரங்குகளில் அதிரடி ரிலீஸ்!

நவம்பர் 9 அன்று வெளியாகும் 'தொங்க நா கொடுக்கு' பட டிரெய்லர்: நவம்பர் 13ல் திரையரங்குகளில் அதிரடி ரிலீஸ்!

யூடியூப் பிரபலம் மௌலி நடிப்பில் உருவாகியுள்ள கலகலப்பான க்ரைம் காமெடி திரைப்படமான 'தொங்க நா கொடுக்கு' (டிஎன்கே) படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இத்தகவலை படக்குழு சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளது. ராபரி, காமெடி மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்தது. மௌலியின் எதார்த்தமான நகைச்சுவை டைமிங்கும் வசனங்களும் இளைஞர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வரும் நவம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டிற்கு முந்தைய பிரதான விருந்தாக இந்த டிரெய்லர் அமையவுள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிந்தைய வாரத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான நகைச்சுவை விருந்து காத்திருக்கிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்