ஃபஹத் ஃபாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': சென்சாரில் U/A சான்றிதழ், அக்டோபர் 2 ரிலீஸ்!

ஃபஹத் ஃபாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': சென்சாரில் U/A சான்றிதழ், அக்டோபர் 2 ரிலீஸ்!

ஃபஹத் ஃபாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய ஃபேண்டஸி திரைப்படமான 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' (Don't Trouble The Trouble), தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது. இத்தகவலை பிஆர்ஓ பிரதீஷ் சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஷஷாங்க் எலேட்டி இயக்கத்தில், ஆர்கா மீடியா வொர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் இது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வகையில் மாயாஜாலமும் கலகலப்பும் நிறைந்த திரைக்கதையுடன் இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. காலபைரவா இசையமைத்துள்ள இந்தப் படம், ஃபஹத்தின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு நகைச்சுவையும் மாயமும் கலந்த புது விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வயது ரசிகர்களும் குடும்பத்தோடு திரையரங்குகளில் கொண்டாடும் வகையில், அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் இப்படம் மிக பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது.

· Propratheesh

பழைய செய்திகள்