ஃபஹத் பாசில் நடித்துள்ள டோன்ட் டிரபிள் தி டிரபிள் தலைப்பு பாடல் வெளியானது
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து அசத்தும் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'டோன்ட் டிரபிள் தி டிரபிள்' திரைப்படத்தின் தலைப்பு பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கால பைரவாவின் துடிப்பான இசையில் உருவாகியுள்ள இப்பாடல் வெளியானது முதலே இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாஹுபலி போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சஷாங்க் ஏலேட்டி இயக்கியுள்ளார். ஃபஹத் பாசிலுடன் சாரா பலேகர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் முன்னோட்டமும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. ஃபஹத்தின் வழக்கமான அசாத்திய நடிப்பும் துள்ளலான உடல்மொழியும் இப்பாடலிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. ரசிகர்களின் பெரும் ஆவலுக்கு மத்தியில், டோன்ட் டிரபிள் தி டிரபிள் திரைப்படம் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு ரசிக்கக்கூடிய நகைச்சுவை கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Actor Kayal Devaraj