'த்ரிஷ்யம் 3' இந்தி பதிப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

'த்ரிஷ்யம் 3' இந்தி பதிப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

பிரபல நடிகை ஸ்ரீபிரியா மற்றும் ராஜ்குமார் சேதுபதிக்கு சொந்தமான ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம், மலையாளப் படமான 'த்ரிஷ்யம் 3' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த மனுவில், மத்தியஸ்த நடவடிக்கைகள் முடியும் வரை அஜய் தேவ்கன், தபு நடிப்பில் உருவாகும் 'த்ரிஷ்யம் 3' இந்தி திரைப்படத்தை வெளியிடவும் விநியோகிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, எதிர்மனுதாரர்களின் பதில் மனுவிற்காக வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த உரிமைகளைப் பாதுகாக்க சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

· Nikil Murukan

பழைய செய்திகள்