அக்டோபர் 16 அன்று வெளியாகும் புதிய பேண்டஸி திரைப்படம் 'ட்ரோன்ஸ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்டோபர் 16 அன்று வெளியாகும் புதிய பேண்டஸி திரைப்படம் 'ட்ரோன்ஸ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதுமையான கற்பனை மற்றும் ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எதிர்பாராத ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்த இந்த இளமைத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை ஜி.எம். மார்கன் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, திராவிட் செல்வம், முகமது குரைஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ட்ரோன்களைச் சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல டிரெய்லர் எடிட்டர் ரூபன் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் கைகோர்த்துள்ளனர். இளைய தலைமுறையைக் கவரும் வகையிலான ஃபேன்டஸி ஹாரர் கதையம்சத்துடன் தயாராகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படம், வரும் அக்டோபர் 16 முதல் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்