சிரிப்பும் பயமும் கலந்த அனுபவம்: 10 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'ட்ரோன்ஸ்'!
ஹாரர் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்த 'ட்ரோன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களைக் கடந்துள்ளது. புதுமையான கதைக்களத்துடன் வெளியான இப்படத்திற்கு தமிழகமெங்கும் கிடைத்து வரும் தொடர் ஆதரவிற்கு படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அமானுஷ்ய மர்மச் சம்பவங்களுடன் தியேட்டரில் சிரிப்பலைகளை வரவழைக்கும் நகைச்சுவையையும் நேர்த்தியாகக் கலந்து வழங்கியிருப்பது ரசிகர்களுக்குப் புதிய திரையரங்க அனுபவத்தைக் கொடுத்துள்ளது. புதிய முகங்களுடன் எளிய பட்ஜெட்டில் கச்சிதமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் திரையரங்குகளில் குடும்பப் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் காட்சிகளைத் தக்கவைத்துக்கொண்டு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தரமான பொழுதுபோக்கு படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், காமெடி மற்றும் ஹாரர் விரும்பிகளுக்கு 'ட்ரோன்ஸ்' ஒரு ஜாலியான தியேட்டர் கொண்டாட்டமாக நீடிக்கிறது.
· Actor Kayal Devaraj