திரையரங்குகளில் குடும்பங்களை மகிழ்விக்கும் ட்ரோன்ஸ் திரைப்படம்: குழந்தைகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு!

திரையரங்குகளில் குடும்பங்களை மகிழ்விக்கும் ட்ரோன்ஸ் திரைப்படம்: குழந்தைகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு!

திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ள ட்ரோன்ஸ் திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதுமையான கருப்பொருளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சிறுவர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள சுவாரசியமான காட்சிகளும், அதிரடி திருப்பங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. வார இறுதி நாட்களில் திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சமீபகாலமாக குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அரிதாகி வரும் நிலையில், ட்ரோன்ஸ் திரைப்படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையிலான சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்