திரையரங்குகளில் 25-வது நாளை எட்டிய 'ட்ரோன்ஸ்': அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

திரையரங்குகளில் 25-வது நாளை எட்டிய 'ட்ரோன்ஸ்': அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

நல்ல திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் பேராதரவு தருவார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது 'ட்ரோன்ஸ்' (Drones) திரைப்படம். அறிமுக மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இத்திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 25-வது நாளுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 25-வது நாளிலும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வெற்றித் தருணத்தை படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். எந்தவித பெரிய ஆரவாரமும் இல்லாமல், அழுத்தமான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் மட்டுமே ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று இந்த வெற்றியைத் தொட்டுள்ளது. தற்கால இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படம், இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது. நல்ல படைப்புகளுக்கு மக்கள் தரும் இந்த தொடர் ஆதரவு படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்