நான் டெரர்ரு நீ எர்ரர்ரு பாடல் வெளியானது: அக்டோபர் 16 அன்று வெளியாகும் ட்ரோன்ஸ்
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ட்ரோன்ஸ் திரைப்படத்தின் அதிரடியான நான் டெரர்ரு... நீ எர்ரர்ரு லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.மிர்தாத் இயக்கத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, திராவிட் செல்வம், முகமது குரைஷி உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன. துள்ளலான தாளத்துடன் அமைந்துள்ள இந்த புதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகியுள்ள ட்ரோன்ஸ் திரைப்படம் அக்டோபர் 16 முதல் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Only Kollywood