நிறவெறிக்கு எதிரான நகைச்சுவை விழிப்புணர்வு: திரையரங்குகளில் கவனம் ஈர்க்கும் 'ட்ரோன்ஸ்'!

நிறவெறிக்கு எதிரான நகைச்சுவை விழிப்புணர்வு: திரையரங்குகளில் கவனம் ஈர்க்கும் 'ட்ரோன்ஸ்'!

சமூகத்தில் நிலவும் நிறவெறி மற்றும் புறத்தோற்ற பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனித உறவுகளுக்கு தேவை அன்பும் புரிதலுமே தவிர வெளிப்புற நிறம் அல்ல என்பதை நகைச்சுவை மற்றும் பேண்டஸி பாணியில் இப்படம் அழகாக எடுத்துரைத்துள்ளது. ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்கியுள்ள விதம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது. வழக்கமான பிரச்சார நெடியின்றி இளைய தலைமுறையினரைக் கவரும் வண்ணம் எண்டர்டெயின்மெண்ட் கூறுகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. வார இறுதி நாட்களில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று பார்க்க தகுதியான நல்ல படைப்பாக இது அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்