பேண்டஸி ஹாரர் காமெடி 'ட்ரோன்ஸ்': அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியீடு!
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜி.எம். மார்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் ஒரு வித்தியாசமான பேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, முகம்மது குரைஷி, சதீஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஒரு விசித்திரமான கற்பனை உலகில் மாட்டிக்கொள்ளும் ஒரு சுவாரசியமான குழுவின் பயணமும், அங்கு அவர்கள் சந்திக்கும் அலப்பறைகளும் நகைச்சுவை கலந்த திகில் பின்னணியில் சொல்லப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ட்ரோன்ஸ் திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பொழுதுபோக்கு அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj