ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகள்: அக்டோபர் 16-ல் வெளியாகும் 'ட்ரோன்ஸ்' திரைப்பட டிரெய்லர் சாதனை!

ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகள்: அக்டோபர் 16-ல் வெளியாகும் 'ட்ரோன்ஸ்' திரைப்பட டிரெய்லர் சாதனை!

காமெடி, மர்மம் மற்றும் பேண்டஸி கலந்த சுவாரசியமான படைப்பாக உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் சாதனை படைத்துள்ளது. புதுமையான யோசனையுடன் தொழில்நுட்ப டிரோன்களை மையப்படுத்தி நகரும் இந்த கதையில் நகைச்சுவைக்கும் த்ரில்லர் கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்ற புதுமையான காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்று வருகின்றன. ரசிகர்களிடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, 'ட்ரோன்ஸ்' திரைப்படம் அடுத்த வெள்ளிக்கிழமையான அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மாறுபட்ட சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் புதுமையான விருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்