துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகும் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ப்ஸ்: ரசிகர்கள் ஆவல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள சீன் திரைப்படத்தின் டிஎஸ்பி இன்பராஜ் முன்னோட்ட வீடியோ துபாயில் இன்று மாலை பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறது. இதனை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் மாலில் மாலை 6 மணி முதல் நடைபெறும் சிறப்பு விழாவில் இந்த முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்ட திரையில் திரையிடப்படுகிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா ஃபஹத், நஸ்லென் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகை வெளியீடாக வரவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்றைய முன்னோட்ட வெளியீடு படத்திற்கான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
· Sony Music South