துல்கர் சல்மானின் ஆகாசம் லோ ஒக தாரா: ராதே ராதே பாடல் ப்ரோமோ வெளியீடு!
துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகி வரும் ஆகாசம் லோ ஒக தாரா திரைப்படத்தின் ராதே ராதே பாடலின் முன்னோட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழுப் பாடல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. பிஜிலி மற்றும் கிருஷ்ணா ஆகிய கதாபாத்திரங்களின் அழகான உணர்வுபூர்வமான பயணத்தைப் பேசும் இந்தப் பாடலின் இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பான் இந்திய அளவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள துல்கர் சல்மானின் வித்தியாசமான தோற்றம் மற்றும் ரொமான்டிக் காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ராதே ராதே முழுப் பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar