துல்கர் சல்மானின் 'ஆகாசம் லோ ஒக தாரா': ஜி.வி.பிரகாஷ் இசையில் புதிய பாடல்கள் ரிலீஸ்

துல்கர் சல்மானின் 'ஆகாசம் லோ ஒக தாரா': ஜி.வி.பிரகாஷ் இசையில் புதிய பாடல்கள் ரிலீஸ்

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'ஆகாசம் லோ ஒக தாரா' திரைப்படத்தின் 'ராதே ராதே' மற்றும் 'கண்ணே கண்ணே' ஆகிய மெலடிப் பாடல்கள் அனைத்து இசைத் தளங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகப் பிஆர்ஓ வம்சி சேகர் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடல்கள் மனதை மயக்கும் இனிமையான மெல்லிசையுடன் உருவாகியுள்ளன. பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா ஆகியோர் முக்கிய கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. துல்கர் மற்றும் நாயகியரின் ஜோடிப் பொருத்தம் பாடல்களில் தனி அழகாக மிளிர்கிறது. கிருஷ்ணாவின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு வரும் நவம்பர் 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. காதல் மற்றும் மெல்லிசைப் பிரியர்களைக் கவரும் வண்ணம் பாடல்கள் தற்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்