2 கோடி பார்வைகளைக் கடந்து யூடியூபில் சாதனை: துல்கர் சல்மானின் 'ஆகாசம்லோ ஒக தாரா' டீசர்!
துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஆகாசம்லோ ஒக தாரா' (AOT) திரைப்படத்தின் டீசர் இணையத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான (2 கோடி) பார்வைகளைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் டிரெண்டிங்கில் இத்தீசர் இடம்பிடித்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். பவன் சாதினேனி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் மனதை உருக்கும் பின்னணி இசையமைத்துள்ளார். துல்கர் சல்மானின் வித்தியாசமான ஸ்டைலான தோற்றமும், படத்தின் வண்ணமயமான காட்சியமைப்புகளும் சினிமா ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. வரும் நவம்பர் 20 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இந்த பிரம்மாண்ட டீசர் வரவேற்பு, படம் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
· Ursvamsishekar