யூடியூபில் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஆகாசம்லோ ஒக தாரா' டீசர்: நவம்பர் 20ல் பிரம்மாண்ட ரிலீஸ்!
துல்கர் சல்மான் நடிப்பில் பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' (Aakasam Lo Oka Tara) திரைப்படத்தின் டீசர், யூடியூபில் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் ட்ரெண்டாகி சாதனை படைத்துள்ளது. "ஒரு சிறிய கனவு பல மில்லியன் இதயங்களை வெல்கிறது" என்ற உணர்ச்சிகரமான வரிகளுடன் வெளியான இந்த டீசர், ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எளிய மனிதனின் கனவுகள், பாசம் மற்றும் வாழ்வியல் போராட்டங்களை அழகிய காட்சிகளுடன் விவரிக்கும் இந்த திரைப்படம் பான் இந்திய அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
· Ursvamsishekar