துல்கர் சல்மானின் 'ஆகாசம் லோ ஒக தாரா' பட டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது!

துல்கர் சல்மானின் 'ஆகாசம் லோ ஒக தாரா' பட டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது!

பன்முகத் திறமை கொண்ட முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'ஆகாசம் லோ ஒக தாரா' (AOT) திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்குரிய டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை சினிமா பி.ஆர்.ஓக்கள் பகிர்ந்து வருகின்றனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பவன் சாதினேனி இயக்குகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனது கனவுகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இது செதுக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுபூர்வமான பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் டீசரை வரவேற்க துல்கர் சல்மானின் தென்னிந்திய ரசிகர்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்