துல்கர் சல்மானின் 'ஏஓடி': ஜிவி பிரகாஷ் இசையில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்த மெலடி பாடல்!
துல்கர் சல்மான் நடிப்பில் பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏஓடி' படத்தில் இடம்பெற்றுள்ள 'ராதே ராதே' மற்றும் 'கண்ணே கண்ணே' என்ற அழகிய மெலடி பாடல், சமூக வலைத்தளங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மனதை வருடும் வகையில் இசையமைத்துள்ளார். துல்கர் சல்மானின் வசீகரமான ரொமான்டிக் நடிப்பும், காதுகளில் தேனாய் பாயும் இசைக் கோர்ப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே இப்பாடல் இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பாடலின் வரிகளும் காட்சிகளும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றன. சுவாரசியமான காதல் மற்றும் உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் தயாராகியுள்ள 'ஏஓடி' திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. பாடலுக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பு படத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
· Ursvamsishekar