துல்கர் சல்மானின் AOT படத்திலிருந்து 'ராதே ராதே' மெலடி பாடல் வெளியீடு: ஜி.வி. பிரகாஷ் இசை

துல்கர் சல்மானின் AOT படத்திலிருந்து 'ராதே ராதே' மெலடி பாடல் வெளியீடு: ஜி.வி. பிரகாஷ் இசை

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'AOT' திரைப்படத்திலிருந்து 'ராதே ராதே' என்ற ஆன்மார்த்தமான மெலடி பாடல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மயக்கும் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பவன் சாதினேனி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா மற்றும் துல்கரின் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ருஹானி சர்மா முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷின் இந்த புதிய மெலடி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்