5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை: யூடியூபில் பறக்கும் துல்கர் சல்மானின் 'ஏஓடி' டிரெய்லர்!

5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை: யூடியூபில் பறக்கும் துல்கர் சல்மானின் 'ஏஓடி' டிரெய்லர்!

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்து வெளிவரவுள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' (Aakasam Lo Oka Tara / AOT) திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லர், வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே யூடியூப் தளத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இமாலய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து டிரெய்லரைக் கொண்டாடி வருவதாக பிஆர்ஓ வம்சி சேகர் தெரிவித்துள்ளார். துல்கர் சல்மானின் உணர்ச்சிகரமான நடிப்பு, பிரம்மாண்டமான ஒளிப்பதிவு மற்றும் நெஞ்சைத் தொடும் பின்னணி இசை ஆகியவை இந்த டிரெய்லரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. வாழ்க்கைப் போராட்டங்களையும் நேர்மறையான எண்ணங்களையும் மையமாகக் கொண்ட திரைக்கதை அமைந்திருப்பது டிரெய்லர் காட்சிகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் படத்தின் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வரும் 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம், வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்