ராஜமுந்திரி மகளிர் கல்லூரியில் துல்கர் சல்மானுக்குத் திரண்ட மாணவிகள்: ஆகாயத்தில் ஒரு தாரகை கொண்டாட்டம்!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒரு தாரகை திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அவர் ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில் உள்ள ஐஎஸ்டிஎஸ் மகளிர் கல்லூரிக்கு (ISTS Womens College) சென்றிருந்தார். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள் தங்கள் சொந்தக் குடும்பத்து உறுப்பினரைப் போல துல்கருக்குப் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்னிந்திய அளவில் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் துல்கர் சல்மான், மாணவிகளுடன் நேரில் உரையாடி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். கல்லூரி வளாகமே கரகோஷங்களாலும் விசில் சத்தங்களாலும் அதிர்ந்ததுடன், மாணவிகள் அவருடன் செல்ஃபி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அழகான எமோஷனல் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். நவம்பர் 20 அன்று படம் திரைக்கு வரவுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களின் இந்த பேராதரவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
· Ursvamsishekar