துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசனின் 'AOT' தமிழ் டீசர் வெளியீடு: நவம்பர் 20-ல் ரிலீஸ்!
துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏஓடி' (AOT) திரைப்படத்தின் விறுவிறுப்பான தமிழ் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் ஆகிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ரொமான்ஸ் மற்றும் எமோஷன் கலந்த அழகான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது என்பதை தற்போது வெளியாகியுள்ள டீசர் காட்சிகளும், துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதிஹாசனின் சுவாரசியமான கெமிஸ்ட்ரியும் உறுதிப்படுத்துகின்றன. தென்னிந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் 'ஏஓடி' மீது ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நவம்பர் 20 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
· @tamilcinexpress