துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசனின் 'ஏஓடி' தமிழ் டீசர் வெளியீடு: நவம்பர் 20-ல் ரிலீஸ்

துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசனின் 'ஏஓடி' தமிழ் டீசர் வெளியீடு: நவம்பர் 20-ல் ரிலீஸ்

துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பேரன்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான 'ஏஓடி' (AOT) தமிழ் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பவன் சாதினேனி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் இப்படம் காதலைக் கொண்டாடும் அழகிய படைப்பாக உருவாகியுள்ளது. கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இத்திரைப்படம், மனதைத் தொடும் அழகிய காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களை முன்வைக்கிறது என்பதை டீசர் அழகாக வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதி ஹாசனின் வசீகரமான திரை ஜோடிப் பொருத்தமும், ஜி.வி.பிரகாஷின் இனிமையான இசையும் டீசருக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளன. இத்திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மனதை வருடும் தரமான காதல் திரைப்படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சினிமா ரசிகர்களுக்கு இந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்