துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் வசம் 'தேவரா' கேரள ரிலீஸ் உரிமை: செப்டம்பர் 27 பிரம்மாண்ட ரிலீஸ்!
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா ஆக்ஷன் படமான 'தேவரா' திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளதாக மலையாளம் ரிவ்யூ தளம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர், சைப் அலி கான் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவில் துல்கர் சல்மானின் நிறுவனம் படத்தை வெளியிடுவதால் அங்குள்ள முன்னணி திரையரங்குகளில் அதிகப்படியான திரைகளில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது. படத்திற்கான விநியோக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 27 அன்று உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள தேவரா திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், கேரளாவிலும் தொடக்க நாள் வசூல் மிகப்பெரிய சாதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· MalayalamReview