சியான் 62 படத்தில் இணைந்த துஷாரா விஜயன்: படக்குழு அதிகாரப்பூர்வ வரவேற்பு!
சியான் விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படமான 'வீர தீர சூரன்' படத்தில் திறமைமிக்க நடிகை துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அவரை வரவேற்றுள்ளார். சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன், இப்போது விக்ரமுடன் இணைந்து நடிப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எஸ்.யு.அருண்குமார் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. துஷாரா விஜயனின் வருகை படத்தின் கதைக் களத்திற்கு புதிய பலம் சேர்க்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
· Riyashibu_