ஷாருக் கானின் 'கிங்' படத்தில் எட் ஷீரன் பாடல்: 'து மில் ஜாயே' உருவான சுவாரசிய கதை!
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் 'து மில் ஜாயே' என்ற பாடலில் சர்வதேச பாப் இசை நட்சத்திரம் எட் ஷீரன் பாடியுள்ளார். இப்பாடலில் இணைந்தது குறித்து எட் ஷீரன் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. ஷாருக் கானும் எட் ஷீரனுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வருகை தந்தபோது ஷாருக் கானுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் இந்த சர்வதேச இசைக்கூட்டணி சாத்தியமானதாக எட் ஷீரன் குறிப்பிட்டுள்ளார். இந்திய இசையோடு மேற்கத்திய பாப் பாணியை இணைத்து இப்பாடல் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சுஜாய் கோஷ் இயக்கத்தில் ஷாருக் கான் மற்றும் சுஹானா கான் இணைந்து நடிக்கும் 'கிங்' படம் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வருகிறது. சர்வதேச புகழ் பெற்ற எட் ஷீரன் பாடியுள்ள இப்பாடல் படத்தின் இசை எதிர்பார்ப்பை உலகளவில் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
· @xpresscinema