துபாயில் எடிட்டிங் பிரீவியூ: தயாரிப்பாளர் கண்ணன் ரவி குறித்து எடிட்டர் ஆண்டனி சுவாரசிய பகிர்வு!
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர் ஆண்டனி, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளை முடித்ததும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் படத்தை பார்க்க அழைத்தபோது, அவர் தன்னை நேரடியாக துபாய்க்கு வருமாறு அழைத்ததாக ஆண்டனி கூறினார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்து சுற்றிப்பார்த்த பிறகு, இறுதி நாளில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் படத்தின் அவுட்புட் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி தன் மீது வைத்த அபரிமிதமான நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் ஆண்டனி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். பிரபுதேவா மற்றும் வடிவேலுவின் காமெடி கெமிஸ்ட்ரி திரையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Actor Kayal Devaraj