சசிகுமார் நடிக்கும் புதிய படம்: எடிட்டராக இணைந்தார் பிரபல படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்!

சசிகுமார் நடிக்கும் புதிய படம்: எடிட்டராக இணைந்தார் பிரபல படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்!

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நாயகனாக நடிக்கும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது தயாரிப்பில், பிரபல படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதனை படக்குழுவினர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படத்தை இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்குகிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் சேத்தன் தியோலேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். பல முன்னணி திரைப்படங்களில் சிறப்பான எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சான் லோகேஷ் இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் தொழில்நுட்ப பலத்தை உயர்த்தியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதாநாயகி, இதர நடிகர்கள் மற்றும் முதல் பார்வை போஸ்டர் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்