நவம்பரில் ரீலோடாகும் 'ஈ நகரானிகி ஏமைந்தி': நவம்பர் 3-ல் டிரெய்லர் ரிலீஸ்!

நவம்பரில் ரீலோடாகும் 'ஈ நகரானிகி ஏமைந்தி': நவம்பர் 3-ல் டிரெய்லர் ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரிட் கல்ட் திரைப்படமான 'ஈ நகரானிகி ஏமைந்தி' (ENE) மீண்டும் திரையரங்குகளில் கொண்டாட்டமாக வரவுள்ளது குறித்து தயாரிப்பு வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இந்த நவம்பர் மாதத்தை #ItsENENovember என்று படக்குழு உற்சாகமாகப் பெயரிட்டுள்ளது. தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஷ்வக் சென், சுஷாந்த், அபினவ் கோமடம், வெங்கடேஷ் காகுமனு ஆகியோர் நடிப்பில் உருவான இந்த நட்புக் கதை, இன்றும் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 3 அன்று புதிய டிரெய்லர் வெளியாகவுள்ளது. மேலும் சிறப்புப் பாடல்கள், புரமோஷன் நிகழ்வுகள் மற்றும் இதுவரை பார்த்திராத புதிய காட்சிகள் ஆகியவை அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. இப்படத்தின் கொண்டாட்டத் திரையிடல் நவம்பர் 19 அன்று திரையரங்குகளில் நடைபெறுகிறது. நண்பர்களுடன் திரையரங்கிற்குச் சென்று மீண்டும் சிரித்து மகிழ ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் உற்சாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்