இம்ரான் ஹாஷ்மியின் அதிரடி ஆக்ஷன் படம் கன்மாஸ்டர் ஜி9: வெளியானது ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபல பாலிவுட் நட்சத்திரம் இம்ரான் ஹாஷ்மி அதிரடி நாயகனாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கன்மாஸ்டர் ஜி9' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. கையில் துப்பாக்கியுடன் இம்ரான் ஹாஷ்மி ஆக்ரோஷமாகத் தோன்றும் போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆதித்யா தத் இயக்கும் இப்படத்தில் ஜெனிலியா மற்றும் அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமியா இப்படத்திற்கு பாடல்களை அமைக்கிறார். தீபக் முகுட், ஹுனார் முகுட் மற்றும் சங்கீதா ஆஹிர் இணைந்து எஸ்.ஆர்.இ ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். பென் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. ரொமான்டிக் நாயகனாக அறியப்பட்ட இம்ரான் ஹாஷ்மி, இதில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுவது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமையும். விறுவிறுப்பான உளவு மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த அதிரடித் திரைப்படம் வரும் 2026 நவம்பர் 27 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Penmovies