ஒரே மணி நேரத்தில் 6,400-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை: புக்மைஷோவில் சக்கைபோடு போடும் 'ஈஎன்இ ரிப்பீட்'!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் 'ஈஎன்இ ரிப்பீட்' திரைப்படத்திற்கு பொதுமக்களிடையே டிக்கெட் முன்பதிவு மளமளவென எகிறி வருகிறது. பிரபல டிக்கெட் முன்பதிவு செயலியான புக்மைஷோவில் (BookMyShow) கடந்த ஒரே மணி நேரத்தில் மட்டும் சுமார் 6,420 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, நண்பர்கள் குழுக்களும் இளைஞர்களும் குடும்பத்தினரும் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல முக்கிய திரையரங்குகளில் அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. வார இறுதி நாட்களை நோக்கி நகரும் வேளையில், இந்த அபாரமான புக்கிங் வேகம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள இளைஞர் கொண்டாட்டப் படத்திற்கு இத்தகைய உற்சாக வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
· Ursvamsishekar