விவேக் சாகர் இசையில் 'ENE ரிப்பீட்' படத்தின் மெலடியான 'பதுக்கம்மா' பாடல் வெளியீடு!
ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஈ நகரானிகி ஏமைந்தி' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'ENE ரிப்பீட்' (ENE 2) படத்திலிருந்து, மனதை வருடும் 'பதுக்கம்மா' லிரிக்கல் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தகவலை எக்ஸ் தளத்தில் வம்சி சேகர் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் சாகரின் மென்மையான மெலடி இசையில், கீர்த்தனாவின் இதயப்பூர்வமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாரம்பரிய உணர்வும் நவீன இசைக் கோர்ப்பும் இணைந்துள்ள இந்த பாடல், கேட்டவுடனேயே மனதில் ஆழமாகப் பதியும் உணர்வை உருவாக்குகிறது. இசைப் பிரியர்கள் மத்தியில் இந்த லிரிக்கல் வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 'ENE ரிப்பீட்' திரைப்படம் வரும் நவம்பர் 19 அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த மெலடி பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
· Ursvamsishekar