மீண்டும் களமிறங்கும் கௌஷிக்: இஎன்இ ரிப்பீட் படத்தில் அபிநவ் கோமடம் கேரக்டர் போஸ்டர்!

மீண்டும் களமிறங்கும் கௌஷிக்: இஎன்இ ரிப்பீட் படத்தில் அபிநவ் கோமடம் கேரக்டர் போஸ்டர்!

ரசிகர்களின் நெஞ்சைக் கவர்ந்த காமெடி கல்ட் திரைப்படமான 'ஈ நகரானிகி ஏமைந்தி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் 'இஎன்இ ரிப்பீட்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பிரியமான கௌஷிக் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகர் அபிநவ் கோமடம் களமிறங்குவதை படக்குழு உறுதி செய்துள்ளது. "அட நான்தான் மெயின் கேரக்டர் டா" என்ற பிரபலமான வசனத்துடன் அபிநவ் கோமடத்தின் அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டரை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் இவரது காமெடி டைமிங்கும் உடல்மொழியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் இவரது கலாட்டா தொடரவுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. நகைச்சுவை கலாட்டாவாக தயாராகி வரும் 'இஎன்இ ரிப்பீட்' திரைப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்