வட அமெரிக்கா பிரீமியரில் 2.50 லட்சம் டாலர்களைக் கடந்து வசூல் வேட்டை நடத்தும் 'ஈஎன்இ ரிப்பீட்'!
தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஷ்வக் சென் நடிப்பில் உருவாகியுள்ள 'ஈஎன்இ ரிப்பீட்' திரைப்படம் வட அமெரிக்கா பிரீமியர் காட்சிகளில் மட்டும் 2.50 லட்சம் டாலர்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பிரபல திரைப்பட மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2018-ல் வெளிவந்து கல்ட் ஹிட் அடித்த 'ஈ நகரானிகி ஏமைந்தி' படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இப்படம் வெளிநாட்டுத் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வருகிறது. பிரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் மூலம் வட அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அங்குள்ள சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். விவேக், கெளசிக், உப்பி உள்ளிட்ட நண்பர்கள் கூட்டணியின் கலகலப்பான கலாட்டா திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளதால், அனைத்து பிரீமியர் திரையிடல்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. தற்போது வரை 2.50 லட்சம் டாலர் வசூலைக் கடந்துள்ள இப்படத்தின் வரவு, அடுத்தடுத்த வழக்கமான காட்சிகளிலும் மளமளவென உயர்ந்து 3 லட்சம் டாலர்களைத் தொடும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் உற்சாகக் கொண்டாட்டத்தால் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் 'ஈஎன்இ ரிப்பீட்' படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
· Ursvamsishekar