மீண்டும் களமிறங்கிய ஈஎன்இ கும்பல்: ஈஎன்இ ரிப்பீட் படத்தின் கலக்கலான டிரெய்லர் வெளியானது!
டோலிவுட்டின் கல்ட் கிளாசிக் காமெடி திரைப்படமான ஈ நகரானிகி ஏமைந்தி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ஈஎன்இ ரிப்பீட் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதனை பிரபல தெலுங்கு சினிமா செய்தி தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நண்பர்களின் கூத்து, அளவற்ற கலாட்டா, அதிரடியான நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த முறை கொண்டாட்டம் வெறும் ரிப்பீட் அல்ல, டபுள் ரிப்பீட் என்ற வாசகத்தோடு டிரெய்லர் அமைந்துள்ளது. முதல் பாகத்தை ரசித்த இளைஞர் பட்டாளத்திற்கு இந்த இரண்டாம் பாகமும் அதே நட்பையும் சிரிப்பையும் அள்ளித் தரும் வகையில் உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளது. டிரெய்லரில் உள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், திரையரங்குகளில் சிரிப்பு வெடி வெடிப்பது உறுதி என ரசிகர்கள் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar