ஈ நகரானிகி ஏமைந்தி 2: இஎன்இ ரிப்பீட் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!

ஈ நகரானிகி ஏமைந்தி 2: இஎன்இ ரிப்பீட் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!

தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஷ்வக் சென் நடிப்பில் உருவான புகழ்பெற்ற இளைஞர் திரைப்படமான ஈ நகரானிகி ஏமைந்தி படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இஎன்இ ரிப்பீட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் இளசுகளின் ஆல் டைம் பேவரைட் நண்பர்கள் பட்டாளமான கன்யா ராசி கேங் மீண்டும் புதிய கதைகளத்துடன் களமிறங்குகிறது. விஷ்வக் சென் மற்றும் இயக்குனர் தருண் பாஸ்கர் கூட்டணி மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு உண்டு. இப்போது நவம்பர் 3ஆம் தேதி இந்த புதிய திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்