நாளை வெளியாகிறது 'ENE ரிப்பீட்' பட டிரெய்லர்: மீண்டும் கலக்க வரும் நண்பர்கள் பட்டாளம்!
தெலுங்கு சினிமாவில் கல்ட் கிளாசிக் நகைச்சுவை திரைப்படமாக கொண்டாடப்படும் 'ஈ நகரானிகி ஏமைந்தி' (ENE) படத்தின் இரண்டாம் பாகமான 'ENE ரிப்பீட்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். #ENERepeatTrailer என்ற ஹேஷ்டேக்குடன் இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஷ்வக் சென், அபினவ் கோமடம், வெங்கடேஷ் காகுமனு உள்ளிட்ட நண்பர்கள் பட்டாளம் இணைந்து நடித்த முதல் பாகம் இன்றும் மீம்ஸ்களிலும் நட்பின் கொண்டாட்டங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதே போன்ற கலகலப்பான நகைச்சுவை மற்றும் எனர்ஜியுடன் இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகியுள்ளது. 'தி பாய்ஸ் ஆர் இன் தி மூட்' என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ள முன்னோட்ட வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நட்பையும் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ENE ரிப்பீட்' திரைப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை வெளியாகும் டிரெய்லர் படத்தில் என்ன மாதிரியான நகைச்சுவைக் கலாட்டாக்கள் காத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் என சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar