8 ஆண்டுகளுக்குப் பிறகும் குறையாத வரவேற்பு: யூடியூபில் ட்ரெண்டிங்கில் ஈஎன்இ 2 டிரெய்லர்

8 ஆண்டுகளுக்குப் பிறகும் குறையாத வரவேற்பு: யூடியூபில் ட்ரெண்டிங்கில் ஈஎன்இ 2 டிரெய்லர்

முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஈ நகரானிகி ஏமைந்தி திரைப்படத்திற்கு உள்ள மவுசு சற்றும் குறையவில்லை என்பதை ஈஎன்இ ரிப்பீட் டிரெய்லர் நிரூபித்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப் ட்ரெண்டிங்கில் 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இளைஞர்களைக் கவரும் வசனங்களும் நண்பர்களுக்கு இடையேயான ஜாலியான கலாட்டாக்களும் இந்த டிரெய்லரின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளன. முதல் பாகத்தை தியேட்டர்களிலும் ஓடிடியிலும் ரசித்துப் பார்த்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்தின் டிரெய்லரை இணையத்தில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். நவம்பர் 19 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த யூடியூப் சாதனை மூலம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நகைச்சுவை திரைப்பட விரும்பிகளுக்கு இப்படம் சிறந்த விருந்தாக அமையும் என கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்கள் கணிக்கின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்