ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் $100K முன்கூட்டிய முன்பதிவு: பட்டையைக் கிளப்பும் ஈ நகரானிகி ஏமைந்தி ரீ-ரிலீஸ்!
திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ள 'ஈ நகரானிகி ஏமைந்தி' திரைப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இன்னும் படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்காவில் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே 1 லட்சம் டாலர்களை ($100K) கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெளிநாடுகளில் பிரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் வாழ்வியலையும் நட்பையும் நகைச்சுவையுடன் பேசிய படம் என்பதால், அமெரிக்காவில் வாழும் இந்திய இளைஞர்கள் டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். ரீ-ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்திற்கு ரிலீசுக்கு முன்பே ஒரு லட்சம் டாலர் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அடுத்தடுத்த காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளும் அங்கு அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
· Ursvamsishekar