எனிமி ஆப் தி ஸ்மக்லர் மிரட்டலான டிரெய்லர் வெளியானது: துறைமுகத்தை ஆள வரும் சரண்

எனிமி ஆப் தி ஸ்மக்லர் மிரட்டலான டிரெய்லர் வெளியானது: துறைமுகத்தை ஆள வரும் சரண்

இயக்குநர் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படமான 'எனிமி ஆப் தி ஸ்மக்லர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சரண் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் ஜேடி சக்ரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், மைம் கோபி மற்றும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கடல் துறைமுகம் மற்றும் கடத்தல்காரர்களின் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர், தொடக்கம் முதலே அதிரடி சண்டை காட்சிகளாலும் மிரட்டலான பின்னணி இசையினாலும் ரசிகர்களைக் கவர்கிறது. சட்ட விரோத கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் இப்படமும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீவத் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்