சரண் நடிக்கும் எனிமி ஆப் தி ஸ்மக்லர் டீசர் வெளியானது: கடல் ஆக்ஷனில் மிரட்டும் ஜேடி சக்ரவர்த்தி, லால்

சரண் நடிக்கும் எனிமி ஆப் தி ஸ்மக்லர் டீசர் வெளியானது: கடல் ஆக்ஷனில் மிரட்டும் ஜேடி சக்ரவர்த்தி, லால்

கடல் வழி கடத்தல் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள 'எனிமி ஆப் தி ஸ்மக்லர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது யூடியூபில் வெளியாகி சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் காட்சிகளில் அனல் பறக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் சரண் முதன்மை வேடத்தில் நடிக்க, ஜே.டி. சக்ரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாபர் சாதிக் மற்றும் மைம் கோபி என வலுவான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீவத் படத்தொகுப்பு செய்துள்ளார். டீசரில் இடம்பெற்றுள்ள கப்பல் மற்றும் கடல் காட்சிகள் விறுவிறுப்பான அனுபவத்தை உறுதி செய்கின்றன. கடத்தல்காரர்களுக்கு எதிரான சவாலான மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்