சரண், ராதிகா சரத்குமாரின் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்': டிரெய்லருடன் வெளியான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!
ஐஆர்எஸ் அதிகாரி டி. சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான க்ரைம் ஆக்ஷன் திரைப்படம் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்' (Enemy of the Smuggler). சரண் மற்றும் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகி உள்ளதோடு, படத்தின் திரையரங்க ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை மற்றும் கடத்தல்காரர்களுக்கு இடையே நடக்கும் அதிரடி வேட்டையை மையமாகக் கொண்டு உண்மைக்கு நெருக்கமான காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளது. ஒரு நேர்மையான அரசு அதிகாரியின் நிஜ வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை என்பதால், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள புலனாய்வு காட்சிகள் மற்றும் அதிரடி வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே டீசர் வெளியாகி சினிமா ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள விறுவிறுப்பான டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து பாடல்கள் மற்றும் புரமோஷன் நிகழ்வுகளுடன் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· @xpresscinema