நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது 'என்ன விலை': கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் புதிய த்ரில்லர்!
கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த தகவலை சினிமா வட்டாரங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். கீதேஷ் வி மற்றும் அனு வேணுகோபால் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். யதார்த்தமான கதையம்சமும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் தங்களது இயல்பான மற்றும் தீவிரமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிப் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளனர். அவர்களின் நடிப்புத் திறமை படத்திற்கு கூடுதல் ஆழம் சேர்த்துள்ளது. திரையரங்குகளில் வெளியான போது சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த சுவாரசியமான த்ரில்லர் படைப்பு, தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளதால் இல்லங்களிலிருந்தே திரைப்பட ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
· Actor Kayal Devaraj