திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணம் திரைப்படம்: நவம்பர் 5 அன்று மெகா ரிலீஸ்!

திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணம் திரைப்படம்: நவம்பர் 5 அன்று மெகா ரிலீஸ்!

இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 'ராமாயணம்' திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நமது பாரம்பரிய வரலாற்றையும் பக்தி மார்க்கத்தையும் உணர்த்தும் வகையில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. பக்தி மற்றும் இதிகாசக் கதைகளை நேசிக்கும் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களும் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடனும், கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடனும் இப்படம் மெருகூட்டப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தைக் காண அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதிகாச காவியத்தின் தியாகம் மற்றும் தர்மத்தின் பெருமைகளைத் திரையில் காணும் உன்னதமான திரை அனுபவத்தை இப்படம் வழங்கும் என்பதால் சினிமா வட்டாரத்தில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்