ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் 'எக்ஸ் ரீயூனியன் டே': ஏக்கம் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் 'எக்ஸ் ரீயூனியன் டே': ஏக்கம் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

பழைய நினைவுகளையும் எதிர்பாராத உணர்வுகளையும் கண்முன்னே கொண்டுவரும் நோக்கில் உருவாகியுள்ள 'எக்ஸ் ரீயூனியன் டே' (Ex Reunion Day) என்ற புதிய படைப்பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தரமான திரைப்படங்களை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில், குறும்படங்கள் மற்றும் இசை வரிசையின் கீழ் (DWP Short Films & DWP Music) இப்புதிய படைப்பு தயாராகியுள்ளது. சிவ கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆனந்த் நாக் மற்றும் மிஷா கோஷல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பள்ளி, கல்லூரி காலங்களில் காதலித்துப் பிரிந்தவர்கள் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது ஏற்படும் நினைவுகளையும் சுவாரசிய தருணங்களையும் மையமாகக் கொண்டு இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.ஜி, ஸ்டெர்லின் நித்யா மற்றும் இளா ஸ்ரீ ஆகியோரும் முக்கிய வேடங்களில் இதில் நடித்துள்ளனர். இளைஞர்களின் மனதை மயக்கும் வகையில் சாம் விஷால் மற்றும் சிரிஷா பகவத்துலா இதன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். முதல் பார்வையிலேயே மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்