மலரும் பழைய நினைவுகள்: ஆனந்த் நாக், மிஷா கோஷல் நடித்த 'Ex Reunion Day' குறும்படம் வெளியானது!

மலரும் பழைய நினைவுகள்: ஆனந்த் நாக், மிஷா கோஷல் நடித்த 'Ex Reunion Day' குறும்படம் வெளியானது!

பிரபல தயாரிப்பாளர் பிரபு எஸ்.ஆர் வழங்கி, சுக்ரா பிலிம்ஸ் மற்றும் டிடபிள்யூபி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படைப்பு Ex Reunion Day. காதலின் பழைய இனிமையான நினைவுகளையும் எதிர்பாராத சந்திப்புகளையும் பேசும் இந்தக் குறும்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிவகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் இளம் நடிகர் ஆனந்த் நாக் மற்றும் மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சாம் விஷால் மற்றும் சிரிஷா இணைந்து பாடியுள்ள பின்னணி இசைப் பாடல்கள் காதலின் மெல்லிய உணர்வுகளுக்கு அழகாக உயிரூட்டியுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி கால காதலும், பல வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு சந்திப்பும் ஏற்படுத்தும் மன அலைச்சலை எதார்த்தமான காட்சியமைப்புகளுடன் படக்குழு பதிவு செய்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வரும் இக்குறும்படத்தை இளைஞர்களும் நெட்டிசன்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். உணர்வுப்பூர்வமான காதல் கதைகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு இதமான அனுபவமாக அமைந்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்