திரையரங்குகளில் வெளியானது ஃபகத் பாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': பேண்டஸி கொண்டாட்டம்

திரையரங்குகளில் வெளியானது ஃபகத் பாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': பேண்டஸி கொண்டாட்டம்

மலையாளம் மற்றும் தென்னிந்திய திரையுலகின் தனித்துவமான சிறந்த நடிகரான ஃபகத் பாசில் நடிப்பில் உருவான புதிய பேண்டஸி பொழுதுபோக்கு திரைப்படமான 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' (Don't Trouble The Trouble) தற்போது உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்ஷித் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரிக்கும் ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நகைச்சுவை, பேண்டஸி மற்றும் மாயாஜால திருப்பங்கள் நிறைந்த சுவாரசியமான கதைக் களத்தில் ஃபகத் பாசிலின் கலகலப்பான எனர்ஜியான நடிப்பு ரசிகர்களை திரையரங்குகளில் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் முதல் குடும்பப் பார்வையாளர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து கண்டு ரசிக்கும் வண்ணமயமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகியுள்ள இத்திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் குடும்பங்களின் விருப்பமான தேர்வாக இப்படம் அமையும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

· MalayalamReview

பழைய செய்திகள்