ஃபஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': இன்னும் 4 நாட்களில் ரிலீஸ்
வித்தியாசமான நடிப்பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களைக் கட்டிப்போடும் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' திரைப்படம் திரைக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளன. அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் கவுண்டவுன் போஸ்டரை நடிகர் கயல் தேவராஜ் பகிர்ந்துள்ளார். இயக்குநர் சஷாங்க் ஏலேட்டி இயக்கத்தில், எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இந்த ஃபேன்டஸி திரைப்படத்தை ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபஹத் பாசிலுடன் சாரா பலேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி என்ற கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது என்பதை மாயாஜாலப் பின்னணியில் சொல்லும் சுவாரசியமான கதையாக இது அமைந்துள்ளது. காலபைரவா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறையைக் குறிவைத்து களமிறங்கும் ஃபஹத்தின் இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களுக்குப் புதிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj